தீராத ஒரு காதல் சேமிக்கின்றேன்
தீராத ஒரு காதல் சேமிக்கின்றேன்
பனி விழுகின்ற நேரத்தில்,
நான் ஏனோ கரைக்கிறேன்!
அனல் போலே உன் பார்வை,
அதில் ஏனோ உரைகிறேன்!
வாழும் கனவுகள் இருளுதே,
ஒளியாய் நீ வர, ஏங்குகிறேன்!
குளிரும் மாலையில் ஒரு வேட்கை,
அந்த பயணத்தில் அஞ்சுகிறேன்!
கன்னம் ஏதோ கோலமிட, அதில் ஒரு வண்ணம் நீயிட,
புன்னகை தீர்க்க தவிக்கிறேன்!
சின்ன சின்ன நினைவுகள்
உன்னால் சுவைக்கிறேன்!
நேரங்கள் கழியமல்
காத்திருந்து உழைக்கின்றேன்!
தேக்கி தேக்கி தீராத
ஒரு காதல் சேமிக்கின்றேன்!
ஒரு குளிர்கால மாலை வேளையில்
மொத்தமாய் அனுபவிக்க!!!

