STORYMIRROR

Ananth Sivasubramanian

Classics Others Children

4  

Ananth Sivasubramanian

Classics Others Children

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

1 min
479

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

அறுவடை பண்டிகையாம் பொங்கல் 

வெவ்வேறு ஊரில்

வெவ்வேறு பெயரில்

 கொண்டாடப்படுகிறது


தை திருநாளாம் 

பொங்கல் திருநாள்

நான்கு நாட்களாக

கும்மி ஆடி கும்மி ஆடி

கும்மி அடித்து 

கொண்டப்படுகிறது


போகி பண்டிகை அன்று

வேண்டாததை எரிப்பது போல்

கோபம் போன்ற கெட்ட பழக்கங்களை

விட்டு ஒழிப்போம்


பொங்கல் பண்டிகை

அன்று

சூரியனை வணங்குவோம்

வண்ணம் தீட்டுவோம்

உழவர்களை வணங்குவோம்

பொங்கல் பொங்கி வரும் போது

பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்வோம்

பொங்கல் பொங்குவது போல் 

வாழ்வில் சந்தோசம் பொங்கிடவே

தை மாத முதல் நாளை 

பொங்கலென கொண்டாடிடுவோம்


மாட்டுபொங்கல் நாளினிலே

உழவுக்கு உதவிட்ட மாடுகளை 

அலங்கரிப்போம் வணங்கிடுவோம்

உறவுகள் செழித்திடவே

கணுபிடி வைத்து மகிழ்வோம்


காணும் பொங்கல் நாளிலே

சுற்றத்தினரைக் கண்டு மகிழ்வோம்

கடற்கரை செல்வோம்

விளையாடி மகிழ்வோம்.

 


Rate this content
Log in

Similar tamil poem from Classics