பணம்
பணம்
அதிகப் பணம் உள்ள மக்களை இந்த உலகம் மிகுந்த மரியாதையுடன் நடத்தும்!
எளிய மக்களை இந்த உலகம் சாதாரணமாக நடத்தும்!
பணம் என்பது பொருட்களின் விலையினை நிர்ணயம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு காகிதமேயாகும்!
மதிக்கத் தகாத செயல்களில் ஈட்டுபவரையும் மதிக்கவைத்தவராக மாற்றும் சக்தி இந்தப் பணத்திற்கு உண்டு!
பணம் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் பணம் அற்றவர்களை இகழ்ந்து பேசுவதும் இந்த உலகத்தின் பண்பாக உள்ளது!
பணம் மட்டும் நம் கையிலிருந்தால் உலகில் உள்ள எந்தப் பகுதிக்கும் நாம் சென்று மகிழ்ச்சியாக வாழலாம்!
நேர்மையான முறையில் உழைத்துப் பொருள் ஈட்டிய பணம் நமக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்!
மற்றவர்களைத் துன்புறுத்திக் கிடைக்கின்ற பணத்தினை நாம் புறக்கணித்து விட்டால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் மீது வரி விதித்து அதில் கிடைக்கின்ற பணத்தில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைச் செய்யும்!
மற்றவர்களிடம் அவசியமற்ற கடன் வாங்காமல் கையில் உள்ள பணத்தில் சிக்கனமாகத் தேவைக்கு ஏற்ற முறையில் செலவினைச் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
நாம் சிறந்த கல்வியறிவையும் உழைத்துப் பொருளீட்டிய பணத்தினையும் பெற்றிருந்தால் நம்மைத் தாழ்வாக நினைப்பவர்கள் கூட நம்மை மதிப்பார்கள்!
பணம் மகிழ்ச்சியினைத் தராது என்று எந்த விளிம்பு நிலை மக்களும் கூறியதில்லை!
மிகுந்த பணத்தினைக் கொண்ட எந்த ஒரு செல்வந்தனும் பணத்தினை இழந்திடத் தயாராக இல்லை!
உழைத்துப் பொருள் ஈட்டிய மக்களுக்கு அமைதியான மன நிலையும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் தொடர்ந்து கிடைக்கும்!
