STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Tragedy

4  

Shakthi Shri K B

Abstract Drama Tragedy

பிரிந்தாலும் வாழ்வாய்

பிரிந்தாலும் வாழ்வாய்

1 min
291

இன்னும் எத்தனை நாட்கள் உன் நினைவிலே நான் இருப்பேனோ தெரியவில்லை,

உன்னை கையில் எடுத்து கொஞ்சும் நொடி விரைவில் வராதா என ஏங்கினேன் தினமும்,

தாயாக மாறும் தருணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் சாதனை நாளே.


சற்றும் எதிர் பார்க்கவில்லை நீ அன்று இவ்வுலகிற்கு வருவாய் என்று,

இன்றும் என் வயதான கண்களுக்கு நினைவிற்கு அந்த சந்தோஷமான நாள்,

வருடங்கள் பல ஓடின; நீயும் வளர்ந்து பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து விட்டாய்.


அயல் நாட்டில் வேலை என உற்சாகமா நீ கிளம்பிய நாள்; உன் முன்னேற்றமே என்னக்கு வேண்டிய பரிசு,

தினமும் உன்னுடன் காண் ஒலியில் பேசும் பொது மனம் எண்ணற்ற மகிழ்வைடையும்,

உன்னை நேரில் காண என் கண்கள் ஏங்கி தவித்தன ஒவ்வொரு நொடியும் .


அந்த செய்தி என் செவிக்கு வராமல் இருந்தால் என்ன; ஏன் அதை நான் கேட்க வேண்டிய நிலை,

என் அன்பு மகன் விபத்தில் உயிர் பிரிந்த செய்தி கேட்ட என்னால் நிற்க முடியவில்லை,

நான் இருக்கும்போதே அவனுக்கு பிரியா விடையை கொடுக்க மனம் இன்றி உருக்குலைந்து போன தாய் நானே.


இயற்கை அன்னை என்னை ஆட்கொண்டு அவனை வாழவைத்திருக்கலாம்,

இனி இந்த கண்கள் யாரை பார்க்கும் தன் பிள்ளையாக;இந்த கைகள் யாருக்கு உணவை பரிமாறும்,

இவ்வுலகில் வேறு எந்த தாய்க்கும் இந்த நிலை வரவேண்டாம் என் வேண்டுகிறேன்,

மகனே இவ்வுலகில் நீ இனி இருக்க போவதில்லை ஆனால்,

உன் எண்ணங்கள் நான் வாழும் வரை என்னுடன் வாழும்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract