பசுமைப்புல்வெளி
பசுமைப்புல்வெளி


பசுமைப் புல்வெளியே பசுமைப் புல்வெளியே
பசுவை மேய்த்திடவே கொசுவை விரட்டுகிறேன்
உன் நுனிப்புல் மேய்ந்திடவே என் பசுநா துடிக்கிறதே
உன் தலைமேல் பனித்துளியும் மேய்ச்சலைத் தடுக்கிறதே
பரிதி வந்த பின்னே பனி நீ போவாயோ
பசுமைப் புல்வெளியே பசுமைப் புல்வெளியே
பனை மரத்தடியினிலே படர்ந்த நெல்வெளியே
பனைமர வேரினாலே பசுமை உனக்கடியே
பனைமர ஓலைகளும் பனங்காய் நாறுகளும்
பசுமை தந்திடவே உரமாய்
மாறிடுதே
பசுங்கிளிக் கூட்டங்களே பசுங்கிளிக் கூட்டங்களே
பனம்பழச் சுவையினைப் பதம் பார்க்கும் பறவைகளே
பனைமரப் பொந்துக்குள்ளே
பருவத்தைக் கழித்திடுவாய்
பனங்கள் சாறினையும் தினம்நீ குடித்திடுவாய்
பழங்கதை பேசும் பாட்டிபோலே பனங்கதைபேசி மகிழ்ந்திடுவாய்
பசுமை ஓடைகளே பசுமை
ஓடைகளே
பருவத்து மழைநீரைப் பக்குவமாய் கடத்திடுவாய்
பள்ளத்து நிலத்தினிலே பதமாய்ப் பாய்ந்திடுவாய்
பாரும் செழித்திடவே ஊரும் களித்திடவே
பாதை மாறாமல் பாங்காய் நிறைந்திடுவாய்.