STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

4  

Narayanan Neelamegam

Abstract

ஒரு வழி பாதை

ஒரு வழி பாதை

1 min
23K


எங்கு தொடங்கும் - கரு 

என்று யாருக்கும் தெரியாது.......!!! 


எங்கே முடியும் - கல்லறை 

என்று யூகிக்க முடியாது.......!!!


இதில் மலராத மொக்கு சில  

அளவு மணித்துளி வாழ்க்கை சில 

சிலர் பயண நேரம் மாதங்களோ

சிலர் ஆயுள் காலம் வருடங்களோ 


முதலும் தெரியா.......! 

முடிவும் அறியா .....?

நடுவே இந்த பயணம் 

சாதிக்காக ஒரு கலகம்  

மதத்திற்காக ஒரு வாதம்

இனத்திற்க்காக ஒரு கிளர்ச்சி 

மொழிக்காக ஒரு போராட்டம்

நிலத்துக்காக ஒரு சண்டை

பணத்திற்காக ஒரு யுத்தம் 

பொருளுக்காக ஒரு விரோதம் 


முதலும் தெரியா.......! 

முடிவும் அறியா .....?

இடையில் விடையாக இருப்பது 

தேடல் ஒரு ரசனை 

ஆவல் ஒரு வசீகரம்  

உடல் ஒரு கவர்ச்சியும்  

இயற்கை ஒரு ஸ்வாரஸ்யமும்  


கரு பயண கதவு திறப்பு பாதை 

கல்லறை பயண கதவு முடிவு பாதை 

இது ஒரு வழி பாதை 

வருவதும் ......,போவதும்......, 

உயிர் மட்டும் தான் ...........!!!  


Rate this content
Log in

Similar tamil poem from Abstract