STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Fantasy

4  

Shakthi Shri K B

Drama Classics Fantasy

ஒரு உணவின் குரல்

ஒரு உணவின் குரல்

1 min
229

என்னை கண்டால் அனைவரின் முகம் மலரும் மகிழ்ச்சியில்,

வெள்ளைநிறத்தில் இருக்கும் நானோ வயிற்று பசி போக்குவதில் சந்தோஷம் அடைவேன்,

என் வாழ்நாள் முழுவதும் பிறரின் நன்மைக்காக மட்டுமே வாழ்கிறேன்,

உன்னதனமான உணர்வை மற்றவர்களுக்கு கொடுப்பது என்னக்கு மிகவும் பிடிக்கும்.


அழுகை குரல் கேட்டவுடன் ஒரு அன்னை தேடுவது என்னைத்தானே,

மழலையின் வயிறும் மனமும் நிறைவதும் என்னால்தான்,

ஒருவேளை மட்டும் உணவு கிடைத்தால் போதும் என எண்ணுபர்வர்கள்,

நாடி வருவதும் ஒரு பருக்கை அன்னைத்திற்கு தான்.


அந்த அழகிய கூக்கரில் மூன்று விசில் சத்தத்தில் தயார் ஆகுவதும் நான்தான்,

மண்மணம் மாறாத பானையில் தயாராகுவதும் நானே,

ஒரு ஓட்டை பாத்திரத்தில் அன்னையின் அன்புகலந்து தயாரிப்பதும் என்னைத்தான்,

விருந்திரன் வருகை தந்தால் முதலில் அடுப்பில் சமைப்பதும் என்னையே.


என்னை உணபவர்களுக்கு ஆரோகியாமும் தெம்பும் கிடைக்கும்,

உன்ன நான் கிடைக்காமல் தவிப்பவர்களும் உண்டு இந்த பூமியில்,

ஆயிரம் பயிர்கள் விளையும் பூமியிலே ஆனால் சோற்றுக்கு தேவையோ அரிசி என்னும் நான்,

ஒருவேளை என்னால் இந்த நிலையை மாற்ற முடிந்தால் கொள்ளை ஆனந்தம் அடைவேனே.



Rate this content
Log in

Similar tamil poem from Drama