ஒரே மருந்து
ஒரே மருந்து
எனை....
வேதனைகள் தாக்கிய போதும்....
துன்பங்கள் வாட்டிய போதும்....
துயரங்கள் காட்டிய போதும்..
நான்
சோதனைகளை தாங்கிய போதும்....
அவமானங்களை சுமந்த போதும்...
வெகுமானங்களை ஏந்திய போதும்....
கவலை கொண்டு சோர்ந்த போதும்...
கண்ணீர் ததும்பி வீழ்ந்த போதும்.....
உன் புன்னகையெனும் ஒரேயொரு
மருந்து கொண்டு...எனைத் தேற்றினாய்!
வாழ்ந்து காட்டு என மாற்றினாய்!
நீ மருத்துவனா? தூதுவனா?
மாயோனா? சேயோனா?
மாதவன் வாய் திறந்தான் .....
அதில் அண்டம் தெரிந்தது !
நீ வாய் திறந்தாய் அதில் அண்டம் மறந்தது!
உன் பொக்கை வாய் காட்டிய
கெக்க ....புக்க .... சிரிப்பில்.....
எக்கச்சக்கமாய் எனை மறந்தேனடா!
