என் இதயத்தாள்!
என் இதயத்தாள்!
பூவை அவள் என் ஆண்மையையும்
பூப்படையச் செய்தவள்!
என் ஆணவம் தோற்கடித்து
வெற்றிப் பூவனம் பூக்கச்செய்தவள்!
என் புறமும் அகமும் அறிந்து
நெஞ்சம் அகநக நட்பவள்!
என் இதயத்தாள் அவள்!
உயிர்ப் புதையல் அவள்!
பணிசார் கவிசார் வெற்றியாவும்
என் உழைப்பும் அவள் பொறுப்பும்
கலந்து பெற்ற பிள்ளைகள்!
நீ என் மனைவியான நாளே
எனக்கு ஆண்கள் தினம்! நான்
தினம் தினம் கொண்டாடும் பெண் நீ
உனக்குப் பெண்கள் தினம் தனியாய் எதற்கு?