நிலையாமை
நிலையாமை
நிலையாமையே இங்கு
நிலையாகும்...
நிலையாத வாழ்வில்
நீயும் நானும் எங்கனம்
நிலைப்பது?!
நீயும் நானும் உள்ளவரை
வாழ்வும் உண்டு...
வசதியும் உண்டு...தங்கிச் செல்ல
விடுதியும் உண்டு ..தாங்கிக் கொள்ள
வீடும் உண்டு...தரணி புகழ
வீறும் உண்டு...
மூச்சுள்ளவரையே இது நிஜம்...
அது முடிவதற்குள் தான்
எத்தனை முரண்,பூசல்,
திண்டாட்டம்,கொண்டாட்டம்,
ஆனந்தம்,கவலை,கோபம்,வெறுப்பு,
விருப்பு,சல்லாபம்,சந்தேகம்,
சந்தோஷம்...சொல்லில் அடங்காது
சொல்லி விளக்க...
கற்றுத் தேர்ந்த கல்வியும்...
தேடிச் சேர்த்த செல்வமும்...
உடல் கொண்ட பல உறவு முறையும்
உயிர் வளர்த்த திறமும்
ஓங்கி வளர்ந்த புகழும்
அரியாசனம் ஏறி அமர்ந்த
பதவிகளும் ...
அங்குக் குவித்த பட்டங்களும் நிலபுலனும்...
எங்கே சென்றன...அது
இங்கேயே முடிந்தது...
நீயும் நானும் மட்டும்
எப்படி வந்தோமோ...அப்படியே...!
வியக்கத் தகுந்த வாழ்க்கை...மூச்சினிடையில்
வாழுவது விந்தையிலும் விந்தையன்றோ...!
கண் சிமிட்டும் காலப்பொழுதில்
கனவா நிஜமா எனக் காணவியலாத
மாய லோகம் நம் கண்முன்னே...
கொஞ்சம் மறந்து தான் போவோம்
நான் எனும் அகந்தையை...
நான் எனும் சொல்லையும்...மிச்சம்
அது சொல்லும் ...இந்த எச்சமான வாழ்க்கையின் ரகசியத்தை...
நிலையாமையின் தரிசனத்தை
