நீண்ட நெடிய பாதை
நீண்ட நெடிய பாதை

1 min

23.2K
நீண்ட நெடிய பாதை தனில்
பயணமும் நாளும் தொடர்கிறதே !
அனுபவங்கள் பலவும் தான்
அன்றாடம் பாடம் சொல்கிறதே !
அனுதினமும் வழியெங்கும்
புன்னகை மலர்கள்
அன்புத் தேன் செரிகின்றனவே !
எதிர்பாரா பொழுதினில் துன்பமுமே இடியாய் தான் இறங்குகிறதே !
மகிழ்ச்சியும் அவ்வப்போது
மனதை இலேசாக்கிச் செல்கிறதே!
அனைத்தும் கலந்த வாழ்வு தனிலே
அன்பே ஆதாரமாகிறதே !
அன்பு நிறை உலகமுமே
காட்சி கருத்து இரண்டிற்குமே
மென்மேலும் அழகூட்டுகிறதே !