நீலக்கடல்
நீலக்கடல்
எப்போதும் ஓயாமல்
அலைகளினால் நிறைந்திருக்கும் நீ,
எதையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்
சுபாவத்தை கொண்டவன்,
உந்தன் பிரச்சினைகளை கண்டு பயப்படாதவன்,
உனக்கானவர்களை எப்போதும் துறக்காதவன்,
உன்னில் வாழ்பவர்களை கண்ணெண காப்பவன்....
உனக்குள் பல ரகசியங்களை புதைத்து கொண்டவன்,
உனக்கானவர்களை என்றுமே வருத்தமடைய செய்யாதவன்,
உனக்கானவர்களுக்கு உயிர் மூச்சாய் மாறி போனவன் நீ.....
என்றுமே உன் நிலையில் இருந்து மாறாது இருப்பவன்......

