நெஞ்சிலே ரணமாய் தெரிகிறாய்
நெஞ்சிலே ரணமாய் தெரிகிறாய்
காற்றின் விசைக்கேற்ப நீயும் அசைகிறாய் என் மனமே போகும் தூரம் தொலைவில் இல்லை நீதான் தொலைந்துவிட்டாய்..
பாதைகளில் பயணிப்பதுக்கூட முற்கள் நெஞ்சிலே குத்துவது போல் வலிக்கிறது ஏற்கும் நிலையில் நானும் இல்லை அதை கேட்கும் மொழிகள் உனக்கு புரிவதுமில்லை..
நீ பேசும் வார்த்தைகள் கூட ரணமாய் தெரிகிறது இதயத்திலே மின்சாரம் பாய்வதுபோல் அடித்து சிதறினாய் கீழே..
அழகை இரசிக்கும் கண்ணாடி என்றாவது உடைந்து விடுமென்று தெரிந்தும் இன்று சிதறி கிடக்கும் கண்ணாடி துண்டுகளாய் நின்றேன்..