நேசம்
நேசம்
எல்லாரிடமும் நேசிக்கும் குணம் இருக்கிறது,
அதை மற்றவர்களிடத்தில் நாம் உணரும் போது
நமக்குள் தோன்றும் ஆனந்தம் எல்லையில்லாதது,
அதுவே நாம் மற்றவர்களுக்கு உணர்த்தும் போது,
அவர்கள் கண்களில் தோன்றும் மலர்ச்சி விவரிக்க முடியாதது,
அவர்கள் மனம் உணரும் புத்துணர்வு அளவிட முடியாதது,
அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற புரிதல்,
அப்போது அவர்கள் வார்த்தைகள் வராமல்
கண்களில் தோன்றும் சிறு துளி கண்ணீர் அழகானது.....
