STORYMIRROR

Manimaran Kathiresan

Inspirational Others Children

2  

Manimaran Kathiresan

Inspirational Others Children

முருகா வருவாய் அருள் தாராய்

முருகா வருவாய் அருள் தாராய்

1 min
234

கந்தா கடம்பா கதிர்வே லவனே

எந்தன் ஞானம் எழுகவே யருள்வாய்

என்மேல் கருணை எனக்கா யருள்வாய்

உன்பொருள் பாடவும் உறுதுணை யருள்வாயே 


அறுபடை முருகன் அருள்தரும் குமரன்

ஒறுத்தல் தவிர்க்கும் ஒப்பில்லாத் தலைவன்

மறுமையை விலக்கும் மயிலோன்

வெறுமையைப் போக்கி வெற்றியும் தருவானே 


பணிந்தேன் சிரத்தை படைத்தவன் உன்னிடம் 

துணிந்தேன் வேலுடன் துணையா யென்றும்

கிட்டா தன்பும் கிடைக்கும் குகனிடம்

எட்டா முக்தியும் எடுபடும் இயைந்தே 


மணிமாறன் கதிரேசன்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational