STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Classics

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Classics

முன்னேற்றமா? பின்னடைவா?

முன்னேற்றமா? பின்னடைவா?

1 min
257

அடுப்பறைகள் அழகாகி

பாத்திரங்கள் பளிச்சிட்டு 

மின்னிடத் தொடங்கிய போது

உணவின் தரம் வெகுவாக  

தாழ்ந்து போய்விட்டது..


சொகுசு வாகனங்கள் பெருகி

தொலைதூர பயணங்கள்

இலகுவான போது...

பயணத்தின் தூரம் மட்டும் 

பயனற்று போய்விட்டது 


வசிப்பிடம் வளர்ந்து பெரிதாகி

அரண்மனை போல் அகன்று

விசாலமான போது...

வசிப்போரின் மனங்கள் மிகவும் 

குறுகிப் போய்விட்டது...


பள்ளி கல்லூரிகளில் படித்து 

பல்கலைகழகங்களில் பட்டங்கள்

பெற்ற பட்டதாரியான போது.. 

மனிதனின் மனிதம்

காணாமல் போயவிட்டது...


மருத்துவத்துறை முன்னேறி

மருத்துவ மனைகளின் 

எண்ணிக்கை பெருகிய போது..

ஆரோக்கியம் எஙகோ தொலைந்து 

தொலை தூரம் போய்விட்டது..


வளர்ச்சியின் பாதையென்றும்

முன்னேற்றதின் பாதையென்றும் 

கடந்த சில பத்தாண்டுகளில்

பயணித்த தூரங்கள் 

முன்னேற்றமா? பின்னடைவா??


இரா.பெரியசாமி...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract