Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

முன்னால் காதலியின் திருமண நாள்

முன்னால் காதலியின் திருமண நாள்

1 min
160


கடற்கரை மணலில் அமர்ந்து என்னிடம் காதல் வார்த்தைகள் பேசி ஏமாற்றிய நாள்!

பழைய காதலினை மறந்த எனது காதலித் தனது புதிய திருமண வாழ்க்கையினைத் தொடக்க நாள்!

அன்பு, பாசம், உண்மை, காதல் மற்றும் வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசிக் காதலித்துவிட்டுப் பிறகு என்னை ஏமாற்றிய நாள்!

எனக்கு நிரந்தரப் பொருளாதார வசதியில்லை என்று எனது காதலி என்னை ஒதுக்கிவிட்டு அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்த நாள்!

பொருளாதாரக் காரணிகளே திருமணத்தினை நிர்ணயிக்கும் என்று எனக்கு உணர்த்திய நாள்!

காதலிக்காக எழுதிய அனைத்துக் கவிதைகளையும் தூக்கி எறிந்த நாள்!

காதலிக்காக எழுதிய கவிதை வரிகள் கண்ணீர்விட்டு அழுத நாள்!

காதல் கவிதைகள் காற்றோடு காற்றாக மறைந்து போன நாள்!

கனவுலக வாழ்க்கையின் உண்மைத் தன்மையினை எனக்கு உணர்த்திய நாள்!

எனது காதலித் தனது கணவனைக் கரம் பிடித்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கடைசியாகச் சிரித்த நாள்!

காதலில் தோல்வியுற்று நான் இருந்தபொழுது என் காதலித் தனது கண்கள் இரண்டும் கலங்கிட மண மேடையில் அமர்ந்து இருந்த நாள்!

தன்னுடைய கண்களால் என்னைக் காதலில் வீழ்த்திய எனது காதலி மற்றொருவரைத் திருமணம் செய்து கொண்ட திருமண நாள்!

ஒரு முக்கிய நிகழ்வாக நடந்து முடிந்தது என் காதலியின் திருமண நாள்!

உண்மையான வாழ்க்கை முறையினை நான் உணர்ந்து கொண்டு எனது எதிர்கால வாழ்க்கைப் பயணத்தினை மன முதிர்ச்சியுடன் தொடங்கிய நாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics