மின்சார உலா
மின்சார உலா
காதலியின்
கன்னக் கதுப்புகளில்
திடீரெனத் தோன்றும்
இளஞ்சிவப்பு நிற மாற்றத்தில்
பட்டாம் பூச்சியாிய்ப்
படபடக்கும் இமைகளில்
நாணப் புன்னகையைில்
என் நியூரான்களில்
மின்சார உலா!
இதயத் துடிப்பின்
வேகச் சத்தத்தில்
இரத்த நாளங்களில்
குருதியோட்டச் சூட்டில்
தவிக்கும் பார்வையில்
என் நியூரான்களில்
மின்சார உலா!
காந்தக் கண்களில்
பூக்கும் ஔியில்
மௌணத்தின் மொழியில்
விரிந்த கரங்களின் வழியில்
என் நியூரான்களில்
மின்சார உலா!
உடல்தோல் போர்த்திய என்பில்
உள்ளே வளரும் அன்பில்
பகர்ந்த இரகசியங்களுடன்
நகர்ந்த நாட்களில்
என் நியூரான்களில்
மின்சார உலா!

