மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்
காதலில் தோல்வி
கண்ட காளையொன்று
பொங்கலைப் பார்க்க
கனவுகளோடு
சென்னைப் பட்டினம்
வந்ததுவே!
கண் இமைக்காமல்
கத்திய பசுவின்
குரல் கேட்டு
காதல் கொண்ட
காளைதான்
மெல்ல அருகில்
சென்று ஐ லவ்யு
சொல்லிடவே
பதிலே இல்லா
பசுவிடத்தில்
சென்று அதன் காதில்
முத்தமிட முயலவே
அட்டைக்காது காளையின்
வாயோடு வந்துவிட
இணைக்கப்பட்ட குரலோசையில்
ஏமாந்த மனதை எண்ணி
பட்டினத்தில் இப்படித்தான்
நடக்கிறதோ என
பயந்தபடி கிராமப்புறம்
நகர்நது சென்றதுவே!
வண்டிச் சக்கரங்கள்
மெதுவாக இன்றுமட்டும்
தான் நமக்கு மரியாதை
என்றே காளையிடம்
ரகசியம் பேசிடவே
சவண்டல் மரத்திடம்
ஆறுதல் தேடி படுத்ததுவே!