கூட்டு உழைப்பு
கூட்டு உழைப்பு


பல்வேறு சிந்தனைகள்
தனித்தனி முயற்சிகள்
தனித்திறமையால் மிளிரும்
வல்லுனர்கள் - இவையனைத்தின்
கூட்டு உழைப்பு !
செயல்களும் செய்யும் பணிகளும்
பகிர்ந்திங்கே - நேர்த்தியாக நிறைவுபெற
வெற்றி எனும் இலக்கு கைவசமாக
இங்கே அனைவரும் வெற்றியாளர்களே !
பகிரப்படும் அன்பும் அக்கறையும் இரட்டிப்பாக
மகிழ்ச்சியும் நிறைவுமே இங்கே
பல்கிப் பெருகியதே !