உன்னத உறவு
உன்னத உறவு

1 min

110
எதிரும் புதிரும்
எதிலும் நிகழும்..
இருந்தும் மனமோ, எதிர்சக்திகளை!
சிவப்பாய் மாறும்
கண்கள் இரண்டும்
சினமது ஆகும்,கானல்நீரே!
ஒன்றாய் ஓடி விளையாடி
புகார் மாலை தினம் பாடி
களைத்து அழுத்து ஓய்வெடுக்க...
அழகாய் மாறிய தருணங்கள்!
சேட்டைகள் பலவிதம்
சிக்கல்ஙள் மறுபுறம்
அன்பது நிரந்தரம் .
விட்டுக்கொடுத்து இருந்ததுமில்லை,எவரிடமும்
விட்டுக்கொடுக்க நினைப்பதுமில்லை...
விட்டுச்செல்லும் உறவுகள் பல இருந்தும்.. உடன்பிறந்த சொந்தம்
தொட்டுத்தொடரும் ....
தொடர்கதை போல்....
என்றும் உன்னதமாய்....