அண்ணன்கள்....
அண்ணன்கள்....
கொட்டிக் கொடுக்கும்
அன்புதனிலே
கொள்ளை போகுமே
எம் மனமே !
ஆண்டுகள் ஆயிரமே
கடந்தோடினாலும்
வயதிலே முதிர்வுமே
தானேற்பட்டாலும்
அண்ணண்களின் உள்ளமதில்
தங்கைகள் என்றுமே
செல்லச் சீமாட்டிகளே !
அன்பு பார்வை ஒன்றிலே
பாதுகாப்பு அரணை உணர்த்தியே
ஆதரவு காட்டி அரவணைப்பதில்
அண்ணன்களுக்கு நிகர் அவர்களே !