குடிகாரன்
குடிகாரன்


முதன் முதலாய்
கோப்பையில்
மதுவை நிரப்பி
கையில் ஏந்தி
மதுக்கூடத்தில்
தனிமையில்
தன்னையே மறந்து ....
கேளிக்கைக்காக
தொடங்கிய ஒன்று
கொஞ்ச கொஞ்சமாய்
நிலைமை மாறி
எனக்காக அது (மது)
என்பது போய்
அதற்காக நானாகினேன்
சிந்தனை ....
எனக்காக நீ பிறந்தாயா
உனக்காக நான் பிறந்தேனா
குடித்த பின் ...
.
மறப்பதற்கு சில நாள்
மயக்கத்தில் சில நாள்
தன்னை மறந்து சில நாள்
குடிப்பதற்காக ......
காரணங்கள் தேடும்
கதைகள் கட்டும்
துணைகள் தேடும்
மது என்றால் ....
மாதுவும் மறந்து போகும்
வாழ்க்கை இனிமை யாகும்
பிணமும் எழுந்து நிற்கும்
இன்று மட்டும் இல்லை
இனி என்றும் நான்
உந்தன் ஆதிக்கத்தின் கீழ் .......
இழந்த எதையோ பெற்றது போல் ......