குப்பை மேடு
குப்பை மேடு


உன்னை வெறுக்கும்
உறவுகளே அதிகம்....
உன்னை வரவேற்க
உள்ளங்கள் இல்லை.....
உன்னை
தேடி வரும்
இதயம் இல்லா உயிர்கள்.....!!
தினமும்
குப்பைகளையும்
அழுகிய
காய்கறிகளையும்
நாசமாகிய
பழங்களையும்
வீணாகிய
உணவுகளையும்
உதவாத
பொருட்களையும்
பழைய
பொம்மைகளையும்
கிழிந்த
துணிகளையும்
தேவையற்ற
நெகிழிகளையும்
உடைந்த
கண்ணாடிகளையும்
வெறுப்போடு கொட்டும்
மனிதன்
விருப்பத்தோடு ஏற்கும்
உன் குணம்
நீ உயிரோடு
இருப்பதால்
இல்லற உயிர்கள்
இனிதாய் வாழ்கின்றன.....!!!
உன்னை தொடவோ
உன
்னை பார்க்கவோ
உன்னை சுவாசிக்கவோ
உன்னை வைத்துக்கொள்ளவோ
விரும்பாத உள்ளங்களுக்கு ..............
நீ கட்டுப்பாட்டை
கற்று தருகிறாய்
நீ ஒருமைப்பாட்டை
கற்று தருகிறாய்
நீ அமைதியை
கற்று தருகிறாய்
நீ ஒற்றுமையை
கற்று தருகிறாய்
மனிதன்
உன்னிடம் இருந்து
பல தத்துவங்களை
தெரிந்து கொண்டு
உனை தொட்டியில்
உனை பையில்
உனை வீதியில்
வெளியே எறிகிறான் ......!!!
இதயம் இல்லா
மனிதனே
உனை உருவாக்கி
உன்னை மலை போல்
சேர்த்து விட்டு
கொடுக்கும் பெயர்
குப்பை மேடு ...................!!!