கடவுள்
கடவுள்
வன்முறை தீவிரவாதம் கண்டுதான்
மௌனமாக காற்றில் நின்றனையோ!
உனது இல்லங்களை
நோக்கியபடி உனது
திருமுகம் காண
காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான
அடியவர்களுள் நானும் ஒருவன்!
பாலியல் வன்முறைகளால்
கோபித்து உள்ளிருந்தாயோ!
இலஞ்சங்களின் நெருப்பால்
மனம் வெந்து கதவடைத்தாயோ!
கல்லென பலரும்
கழன்றதால் கொரானாவால்
சுற்றி அடிக்கிறாயோ!
முகமூடியால் மூடிய
தண்டனை ஏன் அளித்தாய்
என்பது புரியாமலே
வானில் ஒளிரும்
இயற்கை கடவுள்களை
வாழ்த்தி மூடியபடி
எம்மதமும் சம்மதம்
என்றே ஒருமைப்பாட்டினை
உணர்ந்திட்டோம்!
மனசாட்சிதான் கடவுள்
என்றே உணர்ந்திட்ட
மக்களின் மனம்
அறிந்து விஷத்தினை
எடுக்க விரைந்து
வருவாயோ!