கடாரம் கொண்டானே
கடாரம் கொண்டானே
பெரும் சோழ சாம்ராஜ்யத்தின்
அனல் பறக்கும் தீப்பொறியே...
வெற்றித் தீயை நெஞ்சில்
சுமந்து வாகை சூடியவனே...
செயங்கொண்ட அருள்மொழி
வர்மனுக்கும் ஒயிலான அழகி
வானவன் மாதேவிக்கும் தவப்
புதல்வனாக அவதரித்தவனே...
நின் கால் வைத்த இடமெல்லாம் உன்
புகழ் பாடும் ஆற்றல் கொண்டவனே...
போர் மூனையில் தலைமை தாங்கி பல
அந்நிய தேசங்களை கைப்பற்றியவனே
கங்கை வரை சென்று போர்த்
தொடுத்து வெற்றியும் பெற்று
கங்கை கொண்ட சோழபுர - புது
தலைநகரையும் நிறுவியவனே
முதன் முறையாக கடல் கடந்து
போருக்காக சென்ற சோழனே
கடாரம் எனும் ஊரை வென்று
கடாரம் கொண்டான் ஆனவனே
நின் புகழை கவிப்பாட
நாளொன்று போதாது
கடாரம் கொண்ட எங்கள்
கோப்பரகேசரி வர்மனான
இராஜேந்திர சோழனே!!!!!
#SMBOSS
