கற்பூரவல்லி
கற்பூரவல்லி
தொட்டியிலும் மண்வெளியிலும்
பிறந்த நாங்கள்
இன்று வியாபாரப் பொருளானோம்!
மக்களின் இருமல் நோய் தீர்க்க
மருந்தாகிய நாங்கள்
வாசனை வீசி நிற்கையிலே
பஜ்ஜியாய் கசாயமாய்
உணவகங்களில் விலைப்பொருளாக
மாறுவது எப்போதோ
அன்றே விவசாயியின் நிலை உயரும்!