கரோனா-வைரஸ்
கரோனா-வைரஸ்
காலை தோட்டத்து
தூதுவளைக் கீரை
பறித்துத் தின்னும்
ஆசையில் கூடை
எடுத்து போகையில்
மூட்டுவலிக்கான
பவளமல்லி இலையும்
வெற்றிலைக் கொடியும்
ரகசியம் பேசிக் கொண்டனவே!
ஊரெங்கும் கரோனா
வைரஸ் பரவிக் கிடக்க
மாடித்தோட்டத்து
மங்கை இவள் உபயத்தால்
சத்தான காய் பழங்கள் நிறைந்த
பை தெருவெங்கும்
சலசலக்க வீடெங்கும்
வேப்பிலை கலந்த
மூலிகை கலந்த சாம்பிராணி
வாசனை மணம் வீச
கற்பூரவல்லி இலைகள்
சமையலில் பொருளாகி நிற்க
கரோனா பகைவன்
செல்ஃபோன் டவர் உச்சியில்
காணாமல் போன மர்மம் கேட்டு
நாய்க்குட்டி வாலாட்டி
சென்றதுவே!