கொய்யா(அ)க்கா
கொய்யா(அ)க்கா
கூடை நிறைய கொய்யாக்கா
கூடி நின்னு வாங்குக்கா
பேரம் பேசிக் கொல்லாம
பாரம் கொஞ்சம் குறையுக்கா
ஒத்தக் காயி தின்னாலே
ஒசந்து நிக்கும் உடம்புக்கா
மொத்தக் காயும் வாங்குனா
சித்தம் உனக்குத் தெளியுமுக்கா
காயைக் கடிச்சுத் தின்னாக்கா கடவாப் பல்லு இருகுங்க்கா உருண்டையான கொய்யாக்கா உடலுக்கு என்றும் நல்லதுக்கா
தினமும் ஒரு கொய்யாக்கா
தின்னு பார்த்தா இனிக்குங்கா உடம்பிலுள்ள நோயை எல்லாம்
ஓட ஓட விரட்டுங்கா
கலப்பு முறை இல்லாத
காயகல்ப மருந்துக்கா
வளர்ப்பு முறை இயற்கையிலே வாங்கி நீயும் தின்னுக்கா
விதை எல்லாம் மருந்துக்கா
சதை மிகுந்த கொய்யாக்கா வளமான வாழ்வு வாழ
வாங்கி நீயும் உண்ணுக்கா.