காதல்
காதல்
கொடுப்பதா எடுப்பதா
கண் பார்த்து மகிழவதா
பார்க்காமல் தவிப்பதா
கை பிடித்து நடிப்பதா
கை உரசலுக்கு ஏங்குவதா
எந்நேரமும் உடன் இருப்பதா
எதிர் பாரா நேரம் எதிர் வந்து நிற்பதா
யான் கொண்ட துயர்சொல்லி தீர்க்க செவிகள் தேடினேன்
சொல்லாத சோகத்தையும் தெரிந்து அருகில் வந்து அணைக்கும் கரம் கொடுத்தான்
கடல் அலையும் கலங்கி போகும்
கடலின் காதலனுக்கு கன்னி பெண் காதலியா என்று
மலையும் மனமுடைந்து போகும்
மன்னவன் மனதில் மங்கையா என்று
காற்றும் கோவம் கொள்ளும்
கண்ணாலன் கரம் ஏன் கருங்கூந்தல் கோதுகையில்
என் அவன்

