STORYMIRROR

Geethu Abinaya Radha

Drama

4  

Geethu Abinaya Radha

Drama

போர்ப்பந்தல்

போர்ப்பந்தல்

1 min
159

 என் இனம் காக்க 

எதிர்த்தோரை எரித்தேன் 

பணிந்தோரை புதைத்தேன் 

பிறர் வலியில் வலிமை கொண்டேன் 

உயிர் பிரிவில் உயர்ந்து நின்றேன் 

சுவாசம் தீர்ந்த சடலத்தில் சாந்தம் கண்டேன் 


என்னை எதிர்க்காத தலைகுனிவும் 

பணியாத பாவனையும் உன்னில் கண்டேன் 


உனக்கே அறியாமல் 

உன்னில் என்னை புரியச்செய்தாய் 

இவையாவும் என் இனம் காக்க கட்டியதன்று 

என் தனிமை தீர்க்க திரட்டியதென்று 


உனக்கே அறியாமல் 

என்னுள் நிரம்பிய நீ இனத்தை தகர்த்தாய் 


உனக்கே அறியாமல் 

உன்னில் என்னை வென்றாய் 


தோல்வியை ஏற்கவிரும்பா அறிவு 

பிரிவை ஏற்கவிரும்பா அன்பு 


தூரம் துரத்தி வெல்ல நினைத்தேன் 

உயிர்தப்பி வென்று நின்றாய் 


அன்பை வெல்ல ஆயுதம் உண்டோ!!!

உனக்கே அறியாமல் 

உன்னில் என்னை புதையவும் செய்தாய் 


மறக்கவும் நினைக்கவில்லை 

நினைக்கவும் மறக்கவில்லை 

மன்றாடி மடிந்தேன் மனதோடு 

மனம் நொந்து தவித்தேன் உன் நினைவோடு 

என்றாவதொருநாள் உனை வந்துசேர்ந்து 

கொண்டாடி மகிழ்வேன் என் கரத்தோடு 


Rate this content
Log in

Similar tamil poem from Drama