காதல் கண்ணாமூச்சி
காதல் கண்ணாமூச்சி


காதல் என்னும் கண்ணாமூச்சியில்,
அவள் என் காதலை கண்டுபிடிக்கவேயில்லை
கடைசி வரை!
விழாக்களின் போது,
அனைவரின் வாழ்த்து மடலுக்கும்
பதில் அளிக்க தெரிந்த அவளுக்கு,
என் வாழ்க்கை மடலுக்கு பதிலளிக்க தெரியவில்லை!
என் வாழ்க்கையெனும் கவிதையில்
ஏற்பட்ட இலக்கணப் பிழை தான் அவளின் காதல்!
முதல் காதல் தோற்றவர்களின் வரிசையின் முடிவில் நிற்கிறேன் நான்!
இருந்தாலும் என்றும் என் காதலுக்கு பொக்கிஷம் அவளின் காதல் கனவுகளும், நினைவுகளும் தான்!