காந்தி பேசினால்
காந்தி பேசினால்
என் வாழ்க்கைக் கதை
படித்தால் மனிதன்
மாண்புற வாழ்வான்
என்று கருதியே
சுயசரிதம் எழுதி
பக்குவமாய் தலைமுறைகள்
படித்துணர கற்சிலையாய்
நிற்கின்றேன்!
ஆண்டுகள் தோறும்
பிறந்த விழாக்கள்
மட்டும் எங்களுக்கு
என நாங்கள்
நினைத்திருந்தால்
அன்றே நாங்கள் எங்கள்
வாழ்க்கையை
சொகுசாக மாற்றியிருப்போமே!
இனி நாங்கள் கேள்விகள்
கேட்க வரமாட்டோம்
என்றே நினைத்து
தீயன செய்யும் மானிடப் பதர்களே!
உடலுக்கு மட்டும்தான்
அழிவுண்டு!
ஆன்மாவிற்கு அழிவில்லை
என்பதை உணர்ந்தே
என்று உங்களை நீங்கள் திருத்தி
வாழ்ந்து நாட்டிற்காக
வாழப்போகிறீர்?
சிறைச்சாலைகளில் பல வசதிகள்
இருப்பது கண்டு
சிதம்பரமும் திலகரும் நானும்
பல கதைகள் சொர்க்கத்தின் வாசலில் இருந்து
எட்டிப்பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தோம்!
பாடுபட்டு பெற்றுத் தந்த
சுதந்திரம் மதத்தாலும்
சாதியாலும்
தீவிரவாதத்தாலும்
மடிவதற்கல்ல என்றே
முழங்கி நீயும் உன்னை நீயும் மாற்றி
இந்தியக்கொடி தாங்கி
தீவிரவாதம் அறுக்க புறப்படு!