காலத்தின் கண்ணாமூச்சி
காலத்தின் கண்ணாமூச்சி


உள்ளமதில் உறவது
உறுதியாய் இருக்கையிலே
காலமும் தூரமும்
என்ன செய்திட முடியும் ?
அன்பிலே முகிழ்த்த உறவு
சின்ன சண்டைகளில்
உறுதியான உறவு
மௌனத்தால் கலைந்திடுமோ ?
காலத்தின் கண்ணாமூச்சியில்
கட்டுண்டு கிடக்கும் அன்பு மனம்
மணம் பரப்பும் நாளில்
மனமும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே !
அதுவரை இன்ப நினைவுகள்
மனதில் இசை மீட்டி
காயங்களையும் வலிகளையும்
ஆற்றிக் கொண்டிருக்கட்டுமே !