இயற்கையின் இளைப்பாறல்
இயற்கையின் இளைப்பாறல்


இயற்கையின் இளைப்பாறலில்
இடையூறாய் இருந்திடக் கூடாதென்றே
மானுட இனம் தனையே
தனிமைப் படுத்தி விட்டு
நீர் நிலை காற்று மண் மரம் என
அனைத்தும் புத்துணர்வு பெற்றே
தம்மை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனவோ ?
மனிதன் தர மறந்த - மறுத்த
உரிமைகளை எலாம் - இயற்கை
தானே நிலைநாட்டிக் கொண்டிருக்கிறதோ?