இயற்கை
இயற்கை
இயற்கையின் மென்குரல்
என் காதுகளில் படர்கிறது!
இயற்கையின் வாசனை
என் சுவாசம் நிறைக்கிறது!
என் இதயத்திலும் மூளையிலும்
அன்பை வளர்க்கிறது!
இயற்கையோடு உலவும்போது
ஆன்மாவை உணர்கிறேன்!
ஆன்மாவின் அரவனைப்பில்
அனைவரிலும் என்னைக் காண்கிறேன்!
உதவும் மனதை
உள்ளே இயக்குவது அன்பன்றோ?
அன்பின் அரவனைப்பில்
பேராசைகள் ஓடிவிடும்!
அன்பே உலகை இணைக்கும் பாலம்!
அன்பை உணர்த்தும் இயற்கையே!
எப்போழும் உன் வாசனையால்
என் சுவாசம் நிரப்பு!
