இனிய பனை
இனிய பனை


என்
அன்பு பனையே..
நீ!
நல்லதொரு துணையே!
உன் வேரின்
ஈரம்!
பனஞ்சோறின்..
பனஞ்சாரின்...
பனங்காயின்...சுவை!
திக்கெட்டும் வீசும்!
பனம்பழத்தின் வாசம்!
பனங்கிழங்கு...
நார் சத்தின் முழுவடிவம்!
பனம்பூவிலிருந்து..
வருமே திருக்கார்த்திகை பொறி!
பனை மரமும்!
பசும் ஓலையும்!
ஏழைக்கு...
குடிசை வேயும்!
தாயும் பிள்ளை மாண்பு!
உன் நிழல் குளுமையில்
நிதமிருந்தேன்!
உன் ஈரமணலில்
எனை மறந்தேன்!
உன் அருமைதனை
தினம் உணர்ந்தேன்!
உனை எண்ணி! எண்ணி!
விழி நனைந்தேன்!
உனை மீண்டும் காண..
தவமிருந்தேன்!