இந்நாள் எனும் எழிற்பெண்
இந்நாள் எனும் எழிற்பெண்
காணுகின்ற கண்களுக்குக்
கவினுருவாய் விருந்தளிக்கும்
நாணுகின்ற சிறுமகளிர்
நன்முகத்தின் வர்ணம்போல்
கீழ்வானைக் கதிரவனின்
கிரணங்கள் கவர்ச்சியாக்க
வீழ்கின்ற பனிப்பொழிவும்
வண்ணங்களில் விளையாட
ஆழ்ந்துறங்கும் புள்ளினங்கள்
அதிசயித்து இசையிசைக்க
வாழ்ந்திடவே இவ்வுலகில்
வந்துதித்தாய் திலகமாய்!
எண்ணங்களில் அன்புடைய
எழிற்பெண்ணே உன்வரவால்
விண்ணுலகும் மண்ணுலகும்
வியப்படைந்து மகிழ்ந்திட்ட
இந்நாளே இன்னாளாம்!
இனிதுடனே வாழ்த்திடுக!
