இசையே!!!
இசையே!!!
பட்ட மனதை தளிர்க்கச்செய்து...
வன்ம மனதை வாஞ்சை பெறச்செய்து...
இன்னலை இனிமையாக்கி...
துன்பத்தை துள்ளலாக்கி...
அன்பை மேலும் ஆழமாக்கி...
அணுக்களில் புகுந்து ஆரவாரம் செய்து...
செவிவழி நுழைந்து உயிர்வலி போக்கி...
இசையாத மனதையும் இசைக்கும் இசையே!
என்னை உன் அடிமையாக்கிகொள் !
என் வாழ்க்கை வசந்தமாகும்!!!