எதற்கு நட்பு கோரிக்கை ?
எதற்கு நட்பு கோரிக்கை ?
ஒரே ஊரில் பிறந்து
ஒரே கூட்டில் படித்து
ஒரே கல்லூரியில் கலந்து
காலப் போக்கில்
தனிக் கிளைகளாய் பிரிந்த
முகம் தெரிந்தும்
முகவரி தெரியாத
நட்பையும் உறவையும்
மனம் தேடும்பொழுது
நட்பு கோரிக்கை மூலம் தேடி
கிளை வேறு என்றாலும்
வேர் ஒன்று என
ஒரு மரத்தின் கீழ்
ஒன்று கூட
மார்க் சுகெர்ஸ்பெர்க் உருவாக்கிய சுந்தரவனமே முகநூல்!!!
அந்த வனத்திற்கு செல்லும் வழியில்
உள்ள
பொய் அடையாளப் புதைகுழி
காம எண்ணம் கொண்ட காட்டுப்பேய்கள்
நட்பென ஏமாற்றி கொல்லும் நயவஞ்சக
நரிக்கூட்டம்
இவற்றையெல்லாம் வென்று
சரியான இடத்தை அடைந்தால்
அது நட்பின் நந்தவனமாகும்!!!