என் தம்பி என் தோழன்
என் தம்பி என் தோழன்


நீ பிறந்ததினம் என் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயம்,
அன்று எனக்கு ஒரு சகோதரன் ஒரு நண்பன் பிறந்தான்.
முதலில் என் கைபிடித்து நீ நடக்க பழகின்னாய்,
பின்பு உன் கைபிடித்து நான் உயர கற்றேன்.
நம் அன்பு சண்டையில் நம் ஓற்றுமை கண்டேன்,
என் பிடிவாதத்தில் நீ விட்டுகுடுப்பதை அறிந்தேன்.
என் திருமணத்திற்கு பிறகு உணர்தேன்,
நீ என்றும் என் தோழன் என்பதை.
நம் பாதை வேறுவேறு எனினும்,
நம் பந்தம் என்றுமமே மாறாது.
என் அன்பு தம்பி எனது தோழனும் ஆவான்!