ஏகாந்தம்
ஏகாந்தம்


வாய் நிறையப் புன்னகையுடன் இல்லாத ஒன்றை இருக்கின்றதாய் சொல்ல வேண்டியதில்லை.... உன் நலம் விசாரிப்பின் போது.......
உணர்ந்ததைச் சொல்லி...புரிய முயலா உன்னிடத்தில் கோபம் பட வேண்டியதுமில்லை.. ஏன் இப்படி இருக்கிறாய் என்ற கேள்வியின் போது....
பாதித்ததை பகர்ந்து .. ஆறுதல் தருவாய் என உன்னிடத்தில் ஏமாற வேண்டியதில்லை.......சொல்லித்தான் தீரேன் என்ற உன் வற்புறுத்தலில் போது......
ஆயிரம் சம்பாசனைகள்... இலையும் தழையும் மரமும் வானத்தோடும் ..எந்த ஏமாற்றமுமின்றி.......
நிசப்தமான பொழுதுகள் அழகானவை......காதலும் கருணையும் நிரம்பியவை.......
அப்பொழுதுகள்.......