STORYMIRROR

வல்லன் (Vallan)

Abstract

4  

வல்லன் (Vallan)

Abstract

சுயத்தின் மயக்கம்

சுயத்தின் மயக்கம்

1 min
432

வானம் வெறித்து 

கண்கள் பூத்து

புகையும் சிகரெட்டுடன்

நின்றிருந்தான் அவன்

பெருவெளியின் அதிசயத்தில்


பச்சை போர்த்திய வயலும்

நீண்டு பரந்த நெடுஞ்சாலையும்

பனியின் அடர் குளிரும்

காரிநாளின் கொடும் இருளும்

ஊரின் பேரமைதியும் 

வாகனங்களின் பேரிரைச்சலும்

பேசாது தனிமையுணர்த்தின


இந்நேரத்தில் வாயு நிறைந்த

மதுக்குப்பி திறந்ததும்

எண்ணங்களின் எரிமலைபோல் 

ஏடாகூடமாய் பொங்கியது


சிறுதுளி வீணாகாது

சுற்றி நாவினால் நக்கி

உள்ளிளுத்தான் சொர்க்கத்தின் உச்சத்தில்


மதனம் நிறைந்த மதுவுண்டு

மனவெளியின் மயான அமைதியில்

தொலைத்த சுயத்தை

தட்டுத்தடுமாறி தேடுகிறான் மயக்கத்தில்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract