சந்திப்போமா நட்பே
சந்திப்போமா நட்பே
நீயும் நானும் ஒன்றாக விளையாடிய நினைவுகள் இன்னும் நீங்கவில்லை,
உன் வருகைக்காக காத்திருந்த நொடிகள் சில என்ற பொதும் அது யூகம் போல இருக்கும்,
நாம் பள்ளிக்கு செல்லும் வழி இன்றும் நான் கடந்து செல்கிறேன் தினமும்,
இப்போது அதை கூட உணரமுடியாமல் போனதே உன்னால்.
இணை பிரியாது இருப்போம் என நாம் எடுத்துக்கொண்ட உறுதி மொழி,
இன்றளவு கூட நம் ஆசிரியர்கள் அதை சொல்லி புன்னகைப்பதுண்டு,
அந்த பள்ளி பருவ நட்பு மிகவும் இதயத்துக்கு நெருக்கமானது,
வாழ்கிற கடைசி நாள் வரை நெஞ்சில் சுமக்கும் ஒரு அறிய உறவு நட்பு.
படிப்பதிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும் சரி நம் இருவரை எதிர்பரவர் எவருமில்லை,
பள்ளி பருவத்தில் தொடங்கி கல்லுரி வரை ஒன்றாகவே பயின்றோம்,
இந்த திருமணம் என்னும் புதிய பந்தம் நம் இருவரையும் பிரித்துவிட்டது,
என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் இரு துருவங்களாக பிரிந்தோம்.
இன்று நாம் இருவரும் வேவ்வேறு நாடுகளில் வசிக்கிறோம்,
என் காலை பொழுதுதோ உன் இரவு பொழுதுதாக இருக்கிறது,
கடல் தாண்டி நீ வாழ்ந்தாலும் நாம் இருவருமே இணை பிரியாதவர்கள் ,
இனி எப்போது நாம் சந்திப்போம் மீண்டும் என்று ஏங்கி இருக்கிறேன் உன் ஆருயிர் தோழி.
