STORYMIRROR

hema malini

Inspirational Others Children

5  

hema malini

Inspirational Others Children

சீரழியும் மாணவர்கள்🙏

சீரழியும் மாணவர்கள்🙏

1 min
406

சீரழியும்

   மாணவர்கள் 

   திருத்துவது

       யார்?

      ‌பொறுப்பு ....?


பெற்று விட்டால் மட்டும் போதுமா???

பேணி வளர்க்க வேண்டுமே!!

பெற்றோர்களும்....


தவறான பாதையில்

சென்றால்..

திருத்துவதற்கு

வழிகளை

அமைத்துக் கொடுங்கள்....


அன்புக்கு ஏங்கி

அணைத்திடும்

இடம் தேடி....

வம்பில் சில பழக்கங்கள்..

வரம்பு மீறி...


நல்ல பண்புகளால்

மதிக்கப் படுவதையும்

அவர்கள் சுதந்திர

எல்லையை..

சுட்டிக் காட்டி புரிய

வைக்க வேண்டும்..


பள்ளி நிர்வாகமும்

பெரும்

தவறு இழைக்கிறது!!

ஆசிரியர்களும்

முக்கிய பங்கு

வகிக்கின்றனர்..



அனைவரும் முதல்

மதிப்பெண்

வாங்க முடியுமா??

கையில் விரல்கள்

ஒன்று போல்

உள்ளதா?



படிக்கும் மாணவர்களிடையே

பாகுபாட்டை வளர்ப்பதேன்?

படிக்காத மாணவர்களை...

தட்டிக் கொடுக்காமல்

மாறாக தட்டிக்

கழிக்கலாமா?

தரம்மில்லாத

சொற்களால்

அனைவரின் முன்

புண்படுத்தலாமா?


புண்பட்ட மனதை

பண்படுத்த

தவறான பாதையில்....

தண்டவாளத்தில்

தடம் புரளும்

ரயில்கள் போல....

இன்றைய மாணவர்கள்

நிலை.!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational