சாவு வீட்டில் நடந்த கதை
சாவு வீட்டில் நடந்த கதை
சாவு நடந்த வீட்டில்
ஒரு தாய் தந்தை.
தன் ஒரே மகனை நன்கு படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினார்கள்.
அவன் வேலையிலிருந்து அமெரிக்கா சென்று அங்கேயே காதல் திருமணம் புரிந்து கொண்டான்.
அவனது அப்பா அம்மா பார்த்த பெண்ணை நிராகரித்து விட்டான். அவன் பெற்றோர்களும் ஆமோதித்தனர்.
பிறகு பையனை பலமுறை இந்தியா வரச்சொல்லி அவர்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டும், அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை பெற்றோரை.
இதனால் வருத்தமடைந்த தந்தை மரணமடைந்துவிட்டார்.
மகனுக்கு தந்தை இறந்த செய்தி அனுப்பப்படுகிறது .
அதை பார்த்து அவன் விமானத்தில் வந்தான்.
தந்தை சடங்குகள் முடிந்ததும் சொல்கின்றான். நாலு கோடி ரூபாய் இந்த வீட்டை நான் விலைக்கு விற்றுவிட்டேன். இது தந்தை சம்பாதித்த சொத்து.
இவனுக்கு உரிமையே கிடையாது.
ஒரு ரூபாய் கூட பெற்றோர்களுக்கு அவன் தரவே இல்லை.
எனவே உங்களை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் என்று.
எவ்வளவோ கதறிப் பார்க்கிறாள். நான் முதியோர் இல்லம் போக மாட்டேன்.
என் கணவன் வாழ்ந்த வீட்டிலேயே நானும் செத்து மடிவேன்.
பிறகு நீ வீட்டை விற்றுக் கொள் என்று .
தரதரவென்று இழுத்துப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு விமானத்தில் கிளம்புகிறான். போகும்போது மனைவி குழந்தைகளுக்கு ஏகப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் வாங்கி கொண்டு அமெரிக்கா சென்று இறங்கி நின்றான். மனைவி குழந்தைகளுடன் சாப்பிட உட்காரும்போது தான் வாங்கிய தின்பண்டங்களை கொடுக்கிறான். அப்போது மனைவி சொல்கிறாள்.
துக்கம் நடந்த வீட்டில் இனிப்பு சாப்பிடக்கூடாது.
வீட்டில் இருந்து ஒருநாள் கூட ஆகவில்லை, ஸ்வீட் சாப்பிடக்கூடாது என்று மனைவி சொல்கிறாள்.
அவன் சொல்கிறான் அப்பாவிற்கு காரியமாய் பல நாட்கள் ஆகிவிட்டன என்று. உடனே மனைவி தாங்கள் விமானத்தில் வந்த ஒரு நாளில் உங்கள் தாயார் இறந்துவிட்டார். எனவே சாவு நடந்த வீட்டில் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று.