மாறிய காலங்கள்
மாறிய காலங்கள்
மழையின் ஈர வாசம்
நெஞ்சினைத் தொட
ஏதேதோ நினைவுகள்
மனம் முழுவதும்
வானத்தை எட்டிப் பிடிக்க
முயன்ற காலங்கள் அது
மலர்ந்தும் மலராத பூக்களைப் போல்
எந்தன் மாலைகள்
வரமெல்லாம் பாரமாய் போனதேனோ
அன்பு கொண்ட இதயம்
உறைந்து போனதேனோ
ஆசைகள் அனைத்தும்
மெளனத்தின் சாயலாய் ஆனதேனோ
மூடியிருக்கும் விழிகளில்
உப்புத்திவலைகள் ஏனோ
