கூண்டு பறவை
கூண்டு பறவை
கூண்டிற்குள் அடைப்பட்ட பறவையாய்,
உந்தன் காதலிடம் அடைப்பட்டு இருந்தேன்,
எதை நீ செய்தாலும்,
காதலோடு ஏற்றுக் கொண்டேன்,
ஆனால் எந்தன் சிறகை உடைத்து,
அடைத்து வைத்திருக்கிறாய் என்பதை அறியாமல்,
உன்னுடன் பயணித்து இருக்கிறேன்,
என்பதை அறியும் போது,
எந்தன் இதயம் சுக்கு நூறாக உடைந்து கிழிந்து விட்டது....
காதலே நீயாவது என்னுடன் கடைசி வரை பயணிப்பாயா?
