அருவி
அருவி
அருவி.....
இயற்கையின் வரப்பிரசாதம்,
இரண்டு பாறைகளுக்கு இடையினில்,
கண்கள் காண இடத்தினில்
எங்கோ தோன்றி,
தனக்கென புதிய பாதையை ஏற்படுத்திக் கொண்டு,
காடுகளிலும் மேடுகளிலும் பரவி,
செடி கொடிகளுடன் விளையாடிக்கொண்டு,
பூக்களின் வாசத்தில் தன்னை மறந்து,
மலையுச்சியில் இருந்து அதி வேகமாக குதிக்கிறது....
எல்லோர் கண்ணெதிரில் விழுந்தாலும்,
யாருடைய கண்ணுக்கும் புலப்படாத இடத்தில் தா
ன் அருவியானது உருவாகிறது.
சிறு உற்றாக தொடங்கிய தன் பயணத்தை,
நதியினில் கலந்து,
பெருக்கெடுத்து,
ஆர்பரிப்புடன்,
தனக்கே உரிய ஓசையுடன்,
கடலினில் தன்னை ஐக்கியமாக்க
வேக வேகமாக ஓடுகிறது,
நடுவினில் யார் தடுத்தாலும் எதிர்த்துக்கொண்டு,
அவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு செல்கிறது,
தன் இன்பத்தை பகிர்ந்துக் கொள்ள ....