அழும் கலை
அழும் கலை


அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால் அழக்கூடாது என்று
நான் என் வழியில் அழுதுகொண்டிருந்தேன்
தனித்த அறை ஒன்றில்
மனம் கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசை கேட்டு
கண்களைத் துடைத்துக் கொண்டேன்
யாரோ பிறந்த நாள்
கேக் வெட்டுவதற்காக வந்து அழைத்தார்கள்
திரும்பி வந்து
விட்ட இடத்திலிருந்து
தொடர்ந்து அழுதபோது
கொஞ்சம்கூட சுருதி விலகவில்லை
பிறகு கதவைத் தட்டியவர்களிடம்,
"இங்கே
யாருமில்லை
நீங்கள் போகலாம்"